மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளதால் எஞ்சிய 3 வாசல்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர் மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதில் முக்கிய வாசல்களாக கருதப்படுபவை கிழக்கு மற்றும் தெற்குவாசல்கள். சுவாமி-அம்மன் சன்னதிகளுக்கு என தனித்தனி கிழக்கு வாசல்கள் உள்ளன. இந்த வாசல்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் சுவாமி சன்னதி கிழக்குவாசல் கடைகளில் தான் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளது.
After the fire accident in Madurai Meenakshi Amman Temple the devotees are allowed through the 3 gates excluding the gate where the fire accident took place